காரூன்
இவன் மூஸா நபியின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு இறைவன் கணக்கிலடங்காத செல்வங்களை வழங்கியிருந்தான். இவனது கருவூலங்களின் சாவிகள் வலிமைமிக்க ஒரு படையினர் சுமக்கும் அளவுக்கு இருந்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.
செல்வத்தின் காரணமாக இவன் வரம்பு மீறியபோது இவனையும், இவனது வீட்டையும் பூமிக்குள் புதையச் செய்து இறைவன் அழித்தான்.