ஒப்பாரி வைக்கக்கூடாது

துக்கம் மேலிடும் போது சப்தமிட்டு ஒப்பாரி வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஒப்பாரி வைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள்

அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)

நூல் : புகாரி (1306)

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களிடத்தில் இரண்டு (கெட்ட பண்புகள்) உள்ளது. அவர்களிடத்தில் உள்ள அந்த இரண்டும் இறைநிராகரிப்பாகும். (ஒன்று) வம்சாவழியில் குறையை ஏற்படுத்துவதாகும். (மற்றொன்று) இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பதாகும்

அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (100)

(துன்பத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்கு) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி) 

நூல் : புகாரி (1294)

ஆனால் ஒப்பாரி வைக்காமல் கவலைப்பட்டாலோ சப்தமிடாமல் கண்ணீர் வடித்தாலோ குற்றமில்லை. 

சஅத் பின் உபாதா (ரலிலி) நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள்.

வீட்டில் நுழைந்தபோது (சஅத் பின் உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், ” என்ன? இறந்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றனர். 

நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர்.  பின் நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லைபின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான்.  

    உமர் (ரலி) அவர்கள்  ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் கம்பினால் அடிப்பார்கள்; கல்லெறிவார்கன்இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) 

நூல் : புகாரி (1304)

    கணவன் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கமாக இருக்கலாம். மற்றவர்கள் யார் இறந்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது. மூன்று நாட்கள் கழிந்து விட்டால் சகஜ நிலைக்குத் திரும்பிவிட வேண்டும். 

நான், தமது சகோதரரை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர் நறுமணம் பூசிக்கொண்டு, “”இது எனக்குத் தேவையில்லைதான்;  ஆயினும் “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தனது கணவனைத் தவிர வேறு யாருடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது

தனது கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்என நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது  நின்றவாறு கூற நான் கேட்டிருக்கிறேன்”  என்றார்.

    அறிவிப்பவர் : ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி)

நூல் : புகாரி (1282)

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி),

நூல் : புகாரி(5504)

இறுதியாக

பெண்களுக்கு மாத்திரம் பிரத்யேகமான பல சட்டங்களை அறிந்துகொண்டோம். தொழும் முறை உளூ செய்யும் முறை தயம்மம் இன்னும் பல விஷயங்களில் ஆண்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு பொருந்தும்.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பெண்களும் ஆண்களைப் போன்றவர்கள் தான் என்று கூறியுள்ளார்கள்பெண்கள் ஆண்களைப் போன்றவர்களாவார்கள்

அறிவிப்பவர் : உம்மு சுலைம் (ரலி)

நூல் : அஹ்மத் (25869)

இவற்றைத் தெரிந்துகொள்ள நபிவழியில் தொழுகைச் சட்டங்கள் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்துக்கொள்ளுங்கள். 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *