பாத்திரங்கள் பயன்படுத்துவது பற்றிய சட்டம்

தங்கம்,வெள்ளி தட்டில் சாப்பிடத் தடை

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார் : பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில்இ அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும்இ மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்“

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான். இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 74. குடிபானங்கள்

பன்றி இறைச்சி பயன்படுத்திய பாத்திரம்

அபூ ஸஃலபா (ரலி)கள் நபியவர்களிடம் அல்லாவின் தூதரே நாங்கள் (யூத கிறிஸ்தவர்களான)வேதக்காரர்களை அண்டை வீட்டார்களாக பெற்றிருக்கிறோம்.அவர்கள் தங்களுடைய பாத்திரத்தில் மதுவக அருந்துகிறார்கள். (அவற்றை நாங்கள் பயன்படுத்துலாமா)? என்று கேட்டார்கள்.

அதற்கு நபியவர் (அவர்கள் சமைப்பதற்கு பயன்படுத்தும் பாத்திரங்கள்)அல்லாத (வேறு பாத்திரங்கள்) உங்களுக்கு கிடைத்தால் அதில் சாப்பிடுங்கள் குடியுங்கள். அவை அல்லாத (வேறு பாத்திரத்தில்) கிடைக்கவில்லையென்றால் அவற்றை நன்றாக கழுவிய பிறகு அவற்றில் சாப்பிடுங்கள் குடியிங்கள்”.

அபூ ஸஃலபா (ரலி)–அபூ தாவூத்(3342)

நாய் வாய் வைத்த பாத்திரங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் (வாய்வைத்துக்) குடித்துவிடுமானால் அந்தப் பாத்திரத்தை அவர் ஏழு முறை கழுவிக்கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 2. தூய்மை471.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 2. தூய்மை

வீட்டு விலங்குகள் வாய் வைத்த பாத்திரங்கள்

அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார். ‘என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?’ என்று கேட்டார். நான் ஆம் என்றேன். ‘இவை அசுத்தமில்லை. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்’ என்று நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.

அறிவிப்பவர்: கப்ஷா
நூல்கள்: திர்மிதி 85, நஸயீ 67, அபூதாவூத் 68

பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும், அத்தண்ணீரில் உளூச் செய்யலாம் (மற்ற செயல்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்) என்பதும் இதிலிருந்து தெரிகின்றது. மேலும் ‘இவை உங்களைச் சுற்றி வரக் கூடிய பிராணிகள்’ என்ற வாக்கியம், காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதை விளக்குகின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed