அப்துன்னாசர் MISC: என்னுடைய பார்வையில் இந்த ஆய்வு சரியானதாகத் தெரியவில்லை. இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே சரியாகத் தெரிகிறது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இதில் அறிவிப்பாளரின் குறை நிறையை மட்டும் வைத்து முடிவெடுத்துள்ளனர். ஆனால் இதில் மறைமுகமான இல்லத் உள்ளது.

இதில் இடம் பெறும் அலி இப்னு அலீ என்பவர் மர்ஃபூ அல்லாத செய்திகளையும் மர்ஃபூவாக அறிவிப்பவர்.

وَقَالَ أحمد : لا بأس بِهِ ، إلا أَنَّهُ رفع أحاديث .

وَقَالَ أبو حاتم : ليس بِهِ بأس ، ولا يحتج بحديثه .

فتح الباري ـ لابن رجب (4/ 385(

மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

அபூ ஸயீத் – அபுல் முதவக்கில் – அலி இப்னு அலீ – ஜஃபர் இப்னு சுலைமான்.

ஆனால் இது அலீ இப்னு அலீ என்பார் ஹஸன் அவர்களிடமிருந்து அறிவிக்கும் தொடர்தான் . இதில் ஜஃபர் இப்னு சுலைமான் தவறிழைத்துள்ளார் என இமாம் அபூதாவூத் குறிப்பிட்டுள்ளார்.

سنن أبي داود ت الأرنؤوط (2/ 83)

قال أبو داود: وهذا الحديثُ يقولون: هو عن علي بن علي، عن الحسن. الوهمُ من جعفر

இதை காரணமாக வைத்து இமாம் அஹ்மத் அவர்களும் இந்த செய்தியை குறைப்படுத்தியுள்ளார்.

وإنما تكلم أحمد فِي هَذَا الحَدِيْث ؛ لأنه روي عَن عَلِيّ بْن عَلِيّ ، عَن الْحَسَن – مرسلاً – ، وبذلك أعله أبو داود ، وخرج فِي ( ( مراسيله ) ) من طريق عمران بْن مُسْلِم ، عَن الْحَسَن ، أن رَسُول الله ( كَانَ إذا قام من الليل يريد أن يتهجد ، يَقُول – قَبْلَ أن يكبر : ( ( لا إله إلا الله ، لا إله إلا الله ، والله أكبر كبيراً الله أكبر كبيراً ، أعوذ بالله من الشيطان الرجيم ، من همزه ونفخه ونفثه ) ) ، ثُمَّ يَقُول : ( ( الله أكبر ) ) .

فتح الباري ـ لابن رجب (4/ 385(

இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களும் இதில் குறை இருப்பதாகக் கூறியுள்ளார்.

سنن الترمذي – شاكر + ألباني (2/ 9)

وقد تكلم في إسناد حديث أبي سعيد كان يحيى بن سعيد يتكلم في علي بن علي [ الرفاعي ] وقال أحمد لا يصح هذا الحديث

என்று இமாம் திர்மிதி குறிப்பிட்டுள்ளார்.

சுப்ஹானகல்லாஹும்ம என்று துவங்கும் துஆவை நபியவர்கள் ஓதியதாக வரும் எந்த செய்தியும் சரியானதல்ல. பலவீனமானவையே என இமாம் இப்னு ஹுசைமா கூறியுள்ளார். அதில இந்த அலி இப்னு அலீ அவர்களின் அறிவிப்பையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.

مجموعة الحديث على أبواب الفقه (مطبوع ضمن مؤلفات الشيخ محمد بن عبد الوهاب، الجزء السابع، الثامن، التاسع، العاشر) (1/ 388)

قال ابن خزيمة: أما ما يفتتح به العامة صلاتهم بخراسان من قولهم ” سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ” فلا نعلم في هذا خبرا ثابتا عن النبي صلى الله عليه وسلم عند أهل المعرفة بالحديث, وأحسن إسناد نعلمه روي في هذا خبر أبي المتوكل عن أبي سعيد. ثم ذكر حديث أبي سعيد وعائشة وأشار إلى حديث جبير. ثم قال: وهذا صحيح عن عمر بن الخطاب أنه كان يستفتح الصلاة مثل حديث حارثة- يريد من رواية عائشة – لا عن النبي صلى الله عليه وسلم, ولست أكره الافتتاح بقوله “سبحانك الله وبحمدك” على ما يثبت عن الفاروق رضي الله عنه أنه كان يستفتح الصلاة. غير أن الافتتاح بما ثبت عن النبي صلى الله عليه وسلم في خبر على بن أبي طالب وأبي هريرة وغيرهما بنقل العدل عن العدل موصولا إليه صلى الله عليه وسلم أحب إلي وأولى بالاستعمال، إذ اتباع سنة النبي صلى الله عليه وسلم أفضل وخير من غيرها. اهـ. (1: 238- 240) .

இவர் அதிகமாகத் தவறிழைக்கக் கூடியவர். இவர் தனித்து அறிவிக்கும் அறிவிப்புகளை ஆதாரமாகக் கொள்வது கூடாது என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(5) وَقَال ابن حبان في “المجروحين” : كان ممن يخطئ كثيرا على قلة روايته ويتفرد عن = الاثبات بما لا يشبه حديث الثقات لا يعجبني الاحتجاج به إذا انفرد (2 / 112). وَقَال ابن حجر في “التهذيب”قال المروذي عن أحمد : لم يكن به بأس إلا أنه رفع أحاديث.

எனவே இந்த அறிவிப்பு பலவீனம் என்பதே உறுதியாகத் தெரிகிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed