*இறை விரோதியும் மனிதகுல விரோதியும்*

————————————————————-

திருமறைக் குர்ஆன் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருவனைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவன் தான் *இறை விரோதியும் மனிதகுல விரோதியுமாகிய ஷைத்தான் ஆவான்.*

மனிதர்களுக்கு நலம் நாடுவதைப் போல் நடித்து, அவர்களின் *உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட்டு, அவர்களை வழிகெடுத்து, நிரந்தர நரகவாதிகளாக ஆக்குவதே* இந்த இறைவிரோதியின் நோக்கமாகும்.

இந்த இறைவிரோதியின் சூழ்ச்சியில் சிக்குண்டு *மனிதர்கள் நாசமாகி விடக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் அதிகமான இடங்களில் இவனைப் பற்றியும் இவனது வழிகேடுகளைப் பற்றியும்* பல எச்சரிக்கைகளைச் செய்துள்ளான்.

*உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர ஷைத்தானுக்கு வேறு எந்த ஆற்றலும் இல்லை* என்பதைத் திருமறை வசனங்களும் நபிமொழிகளும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எடுத்துரைத்த பிறகு *நமது உடலில் நோய் உண்டாக்கும் ஆற்றல் ஷைத்தானுக்கு இருக்கிறது என்பது தவறான நம்பிக்கை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்*. இதனை இன்னும் விரிவாக நாம் காண்போம்.

வழிகெடுப்பதே ஷைத்தானின் நோக்கம்

மனித இனத்தை இறைவழியான நேர்வழியை விட்டும் வழிகெடுத்து, அவர்களை *நிரந்தர நரகத்திற்குரியவர்களாக ஆக்குவதே ஷைத்தானின் லட்சியம்* ஆகும்.

உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் *ஆதமுக்குப் பணியுங்கள்!’’* என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.

*நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?’’* என்று (இறைவன்) கேட்டான். *நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!’’* என்று கூறினான். *இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்’’* என்று (இறைவன்) கூறினான்.

*அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!’’* என்று அவன் கேட்டான். *நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்* என்று (இறைவன்) கூறினான்.

*நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்* என்று கூறினான். *பின்னர் அவர்களின் முன்னும் பின்னும், வலமும் இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்* (என்றும் கூறினான்).

*இழிவுபடுத்தப்பட்டவனாகவும், விரட்டப் பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின்பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்’’* என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன் *7:11-18)*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed