*இறந்த உள்ளங்களை உயிர்ப்பிப்போம்*

சறுக்கிய சிந்தனையோட்டங்களே பெரும்பாலும் ஒழுக்கக்கேட்டிற்கு வழிவகுக்கின்றன.  பெரும்பான்மையான இளைஞர்கள் இன்று இந்த அவலநிலையில் தான் சிக்கியிருக்கிறோம்.

இதற்கு முதலில் தவறான விசயங்களை எண்ணுவதை தடுக்க வேண்டும். தாமாக தோன்றும் எண்ணங்களுக்கும், தாமே எண்ணி மகிழும் எண்ணங்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

தாமாக தோன்றுபவை சைத்தான் ஏற்படுத்துவதாகும். அதன் மீது வெறுப்பையும், *அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பையும் தேடி அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.*

*ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக*! அவன் செவியுறுபவன்; அறிந்தவன் (7:200)

(இறைவனை) அஞ்சுவோருக்கு *ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்* [7:201]

மற்றொன்று நாமே எண்ணி மகிழும், தவறான, இச்சையான எண்ணங்கள். உதாரணமாக ஏதோ ஒரு வெறுக்கத்தக்க விசயத்தை பார்த்தப்பின் அதில் தம்மை ஈடுப்படுத்தி கொள்வதாகவோ, தாமே அதை செய்வதாகவோ, செய்யப்போவதாகவோ எண்ணி கற்பனையில் மகிழ்வது. இது தான் பெரும்பாலும் ஒழுக்க வீழ்ச்சிக்கான முதல்நிலை நோய்அறிகுறியாகும்.

ஷைத்தான் ஏற்படுத்தும் தவறான எண்ணங்களை வெறுத்து இறைவனிடம் பாதுகாப்பு தேடி தவிர்த்துக் கொள்ளாவிட்டால், *தாமே தவறானதை கற்பனை செய்து கீழ்இச்சையை தூண்டுகிற ஆபத்தான அடிமையாதலின் பக்கம் மனிதன் வீழ்ந்து விடுகிறான்*.

*பாவங்களுக்கான விதைகளை மட்டுமே ஷைத்தான்  உள்ளங்களில் விதைக்கிறான்*.  பலவீனமான மனிதனின் கீழான இச்சைகளே செழித்தோங்கி வளர செய்கிறது. *செழித்தோங்கி வளர்ந்து நிற்கும் பாவமரத்தின் வேர்கள் மனநோய்களை தருபவை என்பதை மனிதன் முன்னரே உணர மறுக்கிறான்*.

வேறூன்றி நிற்கும் பாவ மரத்தை தமது உள்ளங்களிலிருந்து வேறோடு பிடுங்கி எறிவோம்

\\*பாவமன்னிப்பு கேட்டு இறைவனிடம் மீளுதல்\\*

*யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்*. [4:110]

*தீய விசயங்களை பேசுவது, பார்ப்பது, கேட்பது, அதன்பக்கம் ஆர்வம் செலுத்துவதில் இருந்து முற்றிலும் தவிர்த்திருப்பது* ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாயாகும். அதை நீர் தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! [ 7:176]

*இறந்த உள்ளங்களை உயிர்ப்பிப்போம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed