Month: September 2022

தொழுகை – கடமையை மறந்தது ஏன்?

தொழுகை – கடமையை மறந்தது ஏன்? இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகவும், தலையாய வணக்கமாகவும் இருப்பது தொழுகையாகும். இத்தொழுகையில் முஸ்லிம்கள் மிகுந்த அலட்சியம் காட்டுகின்றனர். இதற்குக் காரணம் இறைவனையும், இறைகட்டளையையும், அவன் அருட்கொடைகளையும் நாம் மறந்தது தான். கற்சிலைகளையும் கண்ணில் கண்டவைகளையும் கடவுள்…

மனம் ஏற்றுக் கொள்ளாத மார்க்கச் சட்டங்கள்

மனம் ஏற்றுக் கொள்ளாத மார்க்கச் சட்டங்கள் இவ்வுலகில் விரலிட்டு எண்ண முடியாத ஏராளமான கடவுள் கொள்கைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட, மனிதனுக்கு இயலாத பல காரியங்களை மார்க்கம் என்ற பெயரால் கட்டளையிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம்…

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்!

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்! பொருளாதாரத்தின் மூலம் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும், மறுமை வாழ்க்கையிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. பொருளாதாரத்தினால் நன்மைகள் பல விளைவது போல் ஏராளமான தீமைகளும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இதைப்…

எது நாகரீகம்? ஹிஜாப் என்பது அலங்காரமா?

எது நாகரீகம்? ஹிஜாப் என்பது அலங்காரமா? அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலங்கள் மாற மாற அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போன்று வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் கண்டுகொண்டே இருக்கிறோம். நமது…

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா? தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும்…

யாசிக்கக் கூடாது

யாசிக்கக் கூடாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு…

வறுமையும், வசதிகளும் சோதனைதான்

வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான முதல் பயிற்சியாகும். பொருளாதாரத்தைத்…

பயத் தொழுகையும் பயணத் தொழுகையும்

பயத் தொழுகையும் பயணத் தொழுகையும் போர்க்களத்தில் தொழும் தொழுகைக்கு, ஸலாத்துல் கவ்ஃப் – பயத் தொழுகை என்று பெயர். இறைவன் தொழுகையை நமக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமையாக ஆக்கியிருக்கிறான். இவ்வாறு நேரம் குறிக்கப்பட்ட இந்தக் கடமையை போர்க் காலத்திலும், பயணக் காலத்திலும்…

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே! தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இஸ்லாம்…

உடலை வருத்தும் நேர்ச்சைகள்

உடலை வருத்தும் நேர்ச்சைகள் மக்கள் தங்களுக்கு ஏதேனும் ஒரு காரியம் நிறைவேற வேண்டுமானால் அதற்காக நேர்ச்சை செய்வர். அலகு குத்துதல், தீச்சட்டி கையில் ஏந்துதல், காலில் செருப்பில்லாமல் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து கோயிலுக்குச் செல்லுதல், கோயிலைச் சுற்றி அங்கப் பிரதட்சிணம் செய்தல்…

நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை!

நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை! மனித சுபாவம் தீமையின் பால் ஈர்க்கப்படும் தன்மையுடையதாக இருக்கிறது. ஓர் அழகிய பெண் நம் கண் முன்னே நகரும் போது எத்தனையோ தவறான எண்ணங்கள் அலைமோதி விட்டுச் செல்கின்றன. இப்படி மனித மனத்தில் தோன்றுபவை…

சக்திக்கு ஏற்ப கடமை

சக்திக்கு ஏற்ப கடமை இஸ்லாம் மார்க்கம் மக்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தின் கடமைகள் அனைத்தும், “சக்திக்கு அப்பாற்பட்ட சிரமம் இல்லை’ என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அதாவது இஸ்லாம் கூறும் ஒரு கடமையை, செயலைச் செய்வதற்குப் போதிய சக்தி…

ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், “உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்” என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏
إِذَا دَعَا الرَّجُلُ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ
قَالَتِ الْمَلاَئِكَةُ آمِينَ وَلَكَ بِمِثْلٍ
Abu Al-Darda’ said: I heard the Messenger of Allah (ﷺ) say: When a Muslim supplicates for his absent brother the angels say: Amin, and may you receive the like.
Sunan Abi Dawud 1534

بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதி முடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ ۗ
إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
If all the trees on earth were pens, filled by the ocean, with seven more oceans besides, the Words of God would not run out.
God is Majestic and Wise.
[31.Surah Luqman 27]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த -அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.)
இதை பனூ ஃபிஹ்ர் குலத்தாரில் ஒருவரான முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் அபீ காலித் (ரஹ்) அவர்கள் தமது பெருவிரலால் (கடலில் நுழைப்பதைப் போன்று) சைகை செய்தார்கள்” என்று காணப்படுகிறது.
யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்பிலும், “(இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்” என முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 5490., அத்தியாயம்: 51. மறுமை சுவர்க்கம் நரகம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவை ஒரு முஸ்லிமான மனிதருக்காக எங்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தும் போது அவர்கள் பின்வரும் துஆவை கூறியதை செவியேற்றேன்.
இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். புகழுக்குரியவன். இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்
صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، فَسَمِعْتُهُ يَقُولُ: ” اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ، فَقِهِ فِتْنَةَ الْقَبْرِ – وَعَذَابِ النَّارِ، وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَمْدِ، اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ “،
Narrated Wathilah ibn al-Asqa’: The Messenger of Allah (ﷺ) led us in prayer over bier of a Muslim and I heard him say: O Allah, so and so, son of so and so, so guard him from the trial in the grave. And the punishment in Hell. Thou art faithful and worthy of praise. O Allah, forgive him and show him mercy. Thou art the forgiving and the merciful one.”
Sunan Abi Dawud 3202

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மோசமான ஆடையில் கண்டார்கள். உன்னிடத்தில் செல்வம் இருக்கிறதா? என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான் எல்லா செல்வங்களும் உள்ளது. அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தையும் ஆட்டையும் தந்துள்ளான் என்று கூறினேன். (நல்ல ஆடைகளை நீ அணிவதின் மூலம் உனக்கு இறைவன் அளித்த பாக்கியம்) உம்மிடத்தில் பார்க்கப்படட்டும் என்று கூறினார்கள்…
النَّبِيَّ صلى الله عليه وسلم فِي ثَوْبٍ دُونٍ فَقَالَ ‏”‏ أَلَكَ مَالٌ ‏”‏ ‏
.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ مِنْ أَىِّ الْمَالِ ‏”‏ ‏.‏ قَالَ قَدْ أَتَانِيَ اللَّهُ
مِنَ الإِبِلِ وَالْغَنَمِ وَالْخَيْلِ وَالرَّقِيقِ ‏.‏ قَالَ
‏”‏ فَإِذَا أَتَاكَ اللَّهُ مَالاً فَلْيُرَ أَثَرُ نِعْمَةِ اللَّهِ عَلَيْكَ وَكَرَامَتِهِ
Abu al-Ahwas quoted his father saying: I came to the Prophet (ﷺ) wearing a poor garment and he said (to me): Have you any property? He replied: Yes. He asked: What kind is it? He said: Allah has given me camels. Sheep, horses and slaves. He then said: When Allah gives you property, let the mark of Allah’s favour and honour to you be seen.
Sunan Abi Dawud 4063

You missed